என் #குரல் இவைகளுக்காக ஓங்கி ஒலிக்கும்.

இந்த #புத்தாண்டில் என் #குரல் இவைகளுக்காக ஓங்கி ஒலிக்கும்.

1. #அரசியல் – எந்த கட்சியும் கொள்கைகளும் சாராத போதுபார்வையாக இருக்கும் எனது குரல்

2. #சமூக #நீதி – இன்றும் பலருக்கு எட்டாக்கனியாக இருப்பது சமூக நீதியே இந்த தேசத்தில். இதற்காக குரல் கொடுத்தே ஆகவேண்டும்.

3. #மதசார்பின்மை – இது அரசியல்வாதிகளால் மிகவும் துஷ்பிரயோகப்படுத்தபட்டு தனது அர்த்தத்தையே இழந்து நிற்கிறது. ஆனால் இந்தியா எனும் பெரிய தேசம், ஒன்றாய் இருப்பதன் மூல காரணம் மதசார்பின்மையே. தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

4. #பாலியல் #வன்முறை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றிய விழிப்புணர்வு வர குரல் கொடுப்பேன்.

5. #பேச்சு #சுதந்திரம்: இன்று நம் தேசத்தில் மாற்று கருத்தே இருக்க கூடாது என்றாளவில் மக்களின் குரல்வளையை நெருக்கும் கலாசாரம் பரவிவருகிறது. நம் தேசம் ஜனநாயக தேசம், ஆகையால் பேச்சு சுதந்திரம் காக்க குரல் கொடுப்பேன்.

இந்த புத்தாண்டில் ஆரம்பித்து என் வாழ்நாள் முழுதும் இந்த ஐந்தை பற்றியும் தொடர்ந்து பேசி, எழுதி வருவேன் என உறுதி கூறுகிறேன்.

எனது வாசிப்பும், பத்திரிக்கைகள், புஸ்தகங்கள் இந்த தலைப்புகளை சார்ந்தே இருக்கும்.

நான் எழுதுவது இன்றைய சுழ்நிலையில் பலருக்கு ஒவ்வாததாகதான் இருக்கும். அதற்கு நான் பொறுப்பல்ல, தேவை இல்லாக வீண் விவாதங்களுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். அதற்கு எனக்கு நேரமும் இல்லை.

%d bloggers like this: